உடும்புகள் நிறைந்திருந்த பகுதியை உள்ளடக்கியதால் உடுமலைப்பேட்டை சங்க இலக்கியம் காலம் முதல் உடுமலைப்பேட்டை பெயருக்கு சரியான காரணம் இல்லை. உடுமலையைச்சுற்றி உள்ள பகுதிகள் குறித்து கல்வெட்டு ஆதாரங்களும் இலக்கியச்சான்று களும் உள்ள அளவிற்கு உடுமலைப்பேட்டை எனும் ஊரின் பெயருக்கு சான்றுகள் இல்லை.
உடுமலையைச்சுற்றியுள்ள கிராமங்கள் பெயர்கள் இருக்கும் அளவிற்கு உடுமலைப்பேட்டை என்ற ஊரின் பெயருக்கான சான்றுகள் இல்லை.
ஆகவே இது 15 ஆம் நூற்றாண்டிற்குப்பிறகு மக்களின் பழக்கவழக்கத்தால் உருவாக்கப் பெற்றவையாக இருக்கலாம்.
பாளையத்துக்காரர்கள் இருந்த பகுதியால் பாளையம் எனும் ஊர் பெயர்கள் அதிகம் உள்ளது. பாளையத்தாரின் பொறுப்பில் இருந்த பகுதிகளின் பெயர் கொண்டு தெரிய முடிகிறது.
அந்த வகையில்
--------------------------
ரா.பி.சேது பிள்ளை ஊரும் பேரும் பற்றி கூறுகையில் உருவானது புதூர் உருவாக்கப்பட்டது புத்தூர் கால்நடைகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் பெயர் பட்டி என்றும் அந்த வகையில்
மண்ணின் குடிகள் ஒட்டுப்பெயரொடு சேர்த்து வருவது ஊர்ப்பெயர் அந்த வகையில்
இவற்றின் ஒட்டுப்பெயர் கவுண்டர் எனும் இனச்சொல் சுட்டி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
உடுமலை எனும் பெயருக்கு தனியாக பெயர்க்காரணம் இல்லாவிட்டாலும் உடுமலை பகுதிகளைச் சுற்றியுள்ள ஊரின் பெயர்களுக்கு பெயர்க்காரணம் உள்ளது.
கொங்கு மண்டல சதகத்தில் நல்லூருக்கா நாடு என்பது உடுமலைக்கு மேற்கு ஆனைமலைக்கு கிழபுறம் நல்லூர் எனும் ஊர் உள்ளது.
இதன்படி பார்த்தால் நல்லூருக்கா நாடு என்றும் ஏரிப்பாளையம் பகுதி ஒட்டி அமைந்தால் ஏரி நாடு என்றும் அழைக்கப்பெற்றது .
உடுமலை என்பது மேற்க தொடர்ச்சி மலைகளின் ஊடாக அமையப்பெற்றதால் உடுமலை என்றும் அழைக்கப்பெறுகிறது.
குதிரை மலை, ஆனைமலை ஊடே இருப்பதால் உடுமலை எனவும் இருக்கலாம். மேலும் உடுமலைப்பேட்டை என்பது தற்போது 15 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு உருவாகியிருக்கலாம்.இனம் சார்ந்து தொழில் சார்ந்து மன்னர் ஆட்சிக்குப்பிறகு ஆங்கிலேயர் ஆட்சியின் போது கிட்டத்தட்ட 16 ஆம் நூற்றாண்டிற்குப்பிறகே இந்த பெயர் வந்திருக்க வேண்டும்.
ஊரைச் சுற்றி பல்வேறு பின் ஒட்டுப்பெயர்களும் முன் ஒட்டுப்பெயர்களும் வரும் நிலையில் பேட்டை என்ற சொல் வருவது தொழில் சார்ந்து வருவதாககருதலாம்.
உடுமலை நகரைச்சுற்றி பேட்டை என்ற சொல் கொண்ட ஊரின் பெயர் இல்லாதிருப்பதால் இது 16 ஆம் நூற்றாண்டில் ஏதேனும் ஒரு தொழில்
சார்ந்து அமைக்கப்பட்ட உருவாக்கப்பட்ட ஊரே உடுமலைப்பேட்டை என்று கூறப்படுகிறது.
உடுமலை மேற்குத்தொடர்ச்சி மலையின் ஊடே கர்ப்பகிரகத்திற்குள் இருப்பது போன்று எப்போதும் ஒரே தட்ப வெப்பநிலை நிலவி வருகிறது. மிகவும் அதிகமான வெப்பம் இல்லாமல் மிகக்குறைவான குளிரும் இல்லாமல் எப்போதும் ஒரே மாதிரியான சீதோஸ்ண நிலை இருப்பது இம்மண்ணின் சிறப்புகளில் ஒன்று. பாலக்காட்டுக்கண வாய் வழியே வரும் இதமான காற்றும் மேற்குமலைச்சாரலில் தொடங்கும் மழையும் உடுமலையை எப்போதும் ஒரே மாதிரியான சீதோஸ்ண நிலையை உணர வைக்கிறது. இது வடக்கு, பொன்னேரி வரைக்கும் கிழக்கில் மடத்துக்குளம் வரைக்கும் இந்த ஈரக்காற்று எப்போதும் உடுமலை பகுதி மக்களின் மனதை வருடிக்கொண்டே இருக்கும்.
இலெமூரியாக்கண்டத்தின் மிச்சமாக இன்னும் உயிருடன் உயிர்ப்புடன் இருப்பது இந்த மேற்குத் தொடர்ச்சி மலையே. இதன் அடியில் உடுமலைப்பேட்டை இருப்பதே இதன் தனிச்சிறப்பு.
Comments
Post a Comment