உடுமலை ஜாமியா மசூதியின் 170 ஆண்டுகள் மகத்தான வரலாறு

பள்ளிவாசல் என்பது இஸ்லாமியர்களது வணக்கத்தாமாகும். தமிழில் இதைப் பள்ளி என்றும் அழைப்பதுண்டு. சிலர் அரபி மொழிப் பெயரான மஸ்ஜித் என்பதையும் பயன்படுத்துகின்றனர். முஸ்லிம் மக்கள், தொழுகைக்காக ஒன்று கூடும் இடமாகச் செயல்படுவதே பள்ளி வாசல்களின் முக்கியப் பயன்பாடாகும். இசுலாமியர்களுக்கு சமூக மற்றும் சமய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகப் பள்ளிவாசல்கள் விளங்குகின்றன.
கி.பி.ஏழாம் நூற்றாண்டில் திறந்த வெளியில் மிக எளிமையாக ஆரம்பித்த இஸ்லாம் சமயம், உலகின் பல பகுதிகட்டும் வேகமாகப் பரவிய போது பல்வேறு கட்டிடக்கலைப் பாணிகளுடன் பல அம்சங்கள் நிறைந்த பெரிய கட்டிடங்களாக உருப்பெற்றன.
உடுமலையில் பள்ளி வாசல் எப்படி உருவாகிறது?
உடுமலையில் நகரமன்ற தலைவராக இருந்தலர் சையத் காஜா மொய்தீன். இவருடைய தகப்பனார் பெயர் சையத் தீவான் பக்ருதீன பாட்சா. இவரால் தான் உடுமலையில், பள்ளிவாசம் 1848 ஆம் ஆண்டு முதன் முதலாகத்துலக்கப்பட்டது.
இந்தப் பள்ளியில் தொழுகை நடத்துவதற்காக பெங்களூரைச் சேர்ந்த திரு. மக்தும் சாயபு என்பவரை அழைத்து வந்து முதல் தொழுகை தொடங்கப்பட்டது. சையத் தீவான் பக்ருதீள் பாட்சா தனது மகளையே மக்தும் சாயபுக்கு திருமணம் செய்து கொடுத்து அவரை உடுமலையிலேயே தங்கவைத்து தொழுகையை நடத்தி வந்தார்கள்.
இவர்களுடன், இந்தப்பள்ளியின் மற்ற செலவுகள் உடுமலையைச் சேர்ந்த இன்னொரு திவான் குடும்பமான...
திரு.ருக்பி ஆலம் சாயபு அவர்களின் சார்பாகவும் நடை பெற்று வந்தது.
1848 முதல் சில வருடங்கள் கூரையில் இயங்கி வந்த இப்பள்ளி, பின்பு புளி குடோன் என்று அழைக்கப்பட்ட இடத்தில் நாட்டு ஓடுகள் வேய்ந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது.
1899ல் மேற்படி பள்ளியின் 50 வருடங்கள் நிறைவு அடைந்ததின் அடையாளமாகத் தற்போது இருக்கும் (MADRAS TORCH) கட்டிடமும், சுற்றிலும் கற்றுக்கவாகளும் கட்டப்பட்டன.
1958ல் ஹவுஸ் என்னும் தொட்டி கட்டப்பட்டது.
அன்றைய கால கட்டத்தில் உடுமலையில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருந்தது. இக்காரணத்தால் தொழுகைக்கு வருபவர்கள் எதிரில் இருந்த குட்டையில் இருந்து இரண்டு செம்புகளில் தண்ணீர் எடுத்து வருவர். ஒன்றை அவர்கள் ஒலு செய்ய (தொழுகைக்கு முன் கை கால், முகம் கழுவுவது) பயன் படுத்தினர். மற்றொன்றை பள்ளியில் உள்ள ஹவுஸ் எனப்படும் தொட்டியில் ஊற்றி வந்தனர்.
அடுத்து 1960ல் மேற்படி பள்ளி, நீவான் குடும்பத்தாரிடம் இருந்து, பொது உறுப்பினர் பள்ளியாக, தமிழ்நாடு வஃக்பு போர்டின் கீழ கொண்டுவரப்பட்டது.
198-82ல விஸ்தரிப்பு கட்டிடமும், 1988 - 89ல் விஸ்தரிப்பு முதல் தளமும் கட்டப்பட்டது. 2001 - 2003 ல், 3ஆம் விஸ்தரிப்பு கட்டிடமும். 2006 - 2009ல் 3ஆம் விஸ்தரிப்பு முதல் தளமும் கட்டப்பட்டது.
இப்பள்ளியின் முத்தல்வல்லியாக தற்பொழுது திரு.ஹாவி அப்துல் சமது அவர்களும், தலைமை இமாமாக ஹாஜி அப்துல்லா அன்வாரி ஹ்ஜ்ரத் அவர்களும் இருந்து வருகின்றனர்.
இப்பள்ளியின் நிர்வாகக்குழு 3 ஆண்டுகட்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. இப்பள்ளியின் தலைக்கட்டு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தலைமை நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பா.
இந்தப் பள்ளிவாசல் உடுமலை நகரில் உள்ள, பழமை வாய்ந்த சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது. இதனுடைய வயது தற்போது 170 ஆண்டுகள் ஆகும்.
நன்றி திரு.சையது, உடுமலை
( குறிப்பு : கட்டுரை தொகுக்கப்பட்ட ஆண்டு 2013. )

Comments