நம்ம ஊர் உடுமலைப்பேட்டையைப் பற்றி

 


🌴🌴🌴 நம்ம ஊர் உடுமலைப்பேட்டையைப் பற்றி 👌👏💯
🔥 கிட்டத்தட்ட 1960 களிலேயே நகராட்சி அந்தஸ்து பெற்றது உடுமலைப்பேட்டை.
🔥 திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரே ஒரு தேர்வுநிலை அந்தஸ்து பெற்ற நகராட்சி உடுமலை மட்டுமே.
🔥 தாலூக்காக்களிலேயே அதிக கிராம ஊராட்சிகளைக் கொண்ட தாலூக்கா உடுமலை மட்டுமே.
🔥 கோவைக்கு அடுத்தபடியாக உடுமலை மின்பகிர்மான வட்டமே மிகப் பெரியது ஆகும்.
🔥 தென்னிந்தியாவில் சைனிக் எனும் இராணுவப் பயிற்சிப் பள்ளி உடுமலையில்(அமராவதி) மட்டுமே அமைந்துள்ளது.
🔥 திருப்பூர் மாவட்டத்தில் அமைந்த ஒரே ஒரு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உடுமலையில்(திருமூர்த்திநகர்) மட்டுமே உள்ளது.
🔥 திருப்பூர் மாவட்டத்தின் வனவளம் கொண்ட ஒரே பகுதி உடுமலை மட்டுமே..
🔥 அமராவதி, திருமூர்த்தி என இரு அணைக்கட்டுகளை அருகருகே பெற்றிருப்பதோடு செங்குளம், ஒட்டுக்குளம் என ஏழு குளம் பாசனம் கொண்டது உடுமலைப்பேட்டை.
🔥 சமமட்டக்கால்வாய் எனப்படும் காண்டூர் கால்வாய் மூலமாகவும், அமராவதி ஆற்றின் மூலமும் அதிக பாசன வசதி பெறுவது உடுமலை பகுதி மட்டுமே.
🔥 தென்னைக்கு அடுத்தபடியாக பட்டுப்புழு வளர்ப்பிலும், வெல்லம் தயாரிப்பிலும் சாதனை படைப்பது உடுமலைப் பகுதியே.
🔥 கரிசலில் பருத்தி அதிகம் விளைவதும் கொண்டைக்கடலை அதிகம் விளைவதும் உடுமலைப் பகுதியே.
🔥 கரும்பு, வாழை அதிகம் விளைவதும் உடுமலைப் பகுதியில் மட்டுமே.
🔥 காற்று அதிகமாக வீசுவதும், காற்றாலைகளுக்குட் பெயர் பெற்றதும் உடுமலைபேட்டையே.
🔥 திருப்பூர் மாவட்டத்தில் செழிப்பான விவசாயப்பகுதி உடுமலை மட்டுமே.
🔥 திருமூர்த்தி அருவி, தூவானம் அருவி, லக்கோம் அருவி (மறையூர்) எனப் பல அருவிகளைக் கொண்டது உடுமலை.
🔥 நடுவீட்டில் மழை பொழியும் தொட்டிக்கட்டு வீடுகளைக் கொண்டதும் உடுமலைப் பகுதி மட்டுமே.
🔥 பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவி பிறந்ததும் உடுமலையே.
🔥 நகைச்சுவை நடிகர் கவுண்டமணி பிறந்ததும் உடுமலையே.
🔥 பெரும்பாலான ஹிட் படங்கள், பாடல்களும் எடுக்கப் பட்டதும், எடுக்கப் படுவதும் உடுமலையிலே.
🔥 முன்னணி நடிகர்களை வளர்த்துவிட்டதும் உடுமலையே.
🔥 அண்ணன்மார் பாட்டுபுகழ் பூளவாடி
பொன்னுசாமி தோன்றியதும் உடுமலையே.
🔥 திருப்பூர் மாவட்டத்தில் தென்மேற்குப்
பருவமழை அதிகம் பொழிவதும் உடுமலையே.
🔥 நூற்றுக்கணக்கான முதலைகளைக் கொண்ட முதலைப் பண்ணை இருப்பதும் உடுமலையே.
🔥 மூம்மூர்த்திகளின் சங்கமமாகிய திருமூர்த்திக் கடவுள் கோவில்,
💥கோடந்தூர் கட்டளை மாரியம்மன் கோவில்,
💥 புரட்டாசிக்குப் புகழ்பெற்ற ஏழுமலையான் கோவில்,
💥தைப் பொங்கலுக்குப் புகழ்பெற்ற ஆல்கொண்டமால் கோவில் (மாலகோவில்),
💥 கரட்டுப் பெருமாள் கோவில் கரட்டுமடம்,
💥 கொழுமம் கோட்டை மாரியம்மன்கோவில்,
💥 கொழுமம் ஈஸ்வரன் கோவில்,
💥 உடுமலை நகர பிரசன்ன விநாயகர், மாரியம்மன் கோவில்,
💥 மானுப்பட்டி மலை மாசாணியம்மன் கோவில்,
💥 தென்சேரிமலை ஸ்ரீமந்திரகிரி ஆண்டவர் கோவில் என பல்வேறு ஆன்மிகத்தலங்களைப் பெற்றதும் உடுமலைப்பகுதியே.

Comments